Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal, Mother Mary Songs and Roman Catholic Songs collection.

போதும் நீங்க போதும்
உம் சமுகம் உம் பிரசன்னம்-2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா -2
இயேசையா என் மீட்பரே-2-எப்போதும்
1. உம் விருப்பம் செய்வதுதான்
என் வாழ்வின் ஏக்கமையா-2
இதுதானே என் உணவு
இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)
இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே
2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
ஏங்கி தினம் தவிக்கின்றது-2
ஜீவனுள்ள என் தேவனே
என் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2
இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள
3.உம் சமுகம் வாழ்கின்ற நான்
உண்மையிலே பாக்கியவான்-2
எப்போதும் உம்மைத் துதிப்பேன்
எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2
இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை
4. இவ்வுலக வாழ்வைவிட
உம் சமுகம் மேலானது-2
பெலத்தின் மேலே பெலனடைவேன்
வருகையிலே உம்மைக் காண்பேன்-2
இயேசையா என் மீட்பரே-2- பெலத்தின்
5.அழுகையெல்லாம் ஆனந்த
நீரூற்றாக மாற்றுகிறீர்
குளங்களெல்லாம் நிரம்புதையா
வல்லமை மழையாலே-2
இயேசையா என் மீட்பரே-2-குளங்களெல்லாம்
போதும் நீங்க போதும் பாடல் வரிகள், Podhum Neenga Podhum Lyrics