pongkal kanikkai

நிலத்தின் விளைச்சலையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பொங்கல் காணிக்கை
பல்லவி
நிலத்தின் விளைச்சலையே நாங்கள் கொண்டு வந்தோம் உழைப்பின் கனிகளையே உனக்கு இன்று தந்தோம்
ஏற்பாயா இறைவா ஏற்பாயா? -2
சரணம்1
நாங்கள் வாழ உலகைப் படைத்து எமக்கு தந்தாயே வளங்களாலே அதனை நீயும் நிறைத்து வைத்தாயே என்னே உன் அன்பு ! என்னே உன் கருணை ! வந்தோம் உன் பதம் வந்தோம் தந்தோம் அனைத்தும் தந்தோம்-2
சரணம்2
உயிர்கள் நிலைக்க இயற்கைத் தாயை எமக்குத் தந்தாயே பருவந்தோரும் பயிர்கள் செழிக்க ஆசி தந்தாயே என்னே உன் படைப்பு! என்னே உன் கணிப்பு !
வந்தோம் உன் பதம் வந்தோம் தந்தோம் அனைத்தும் தந்தோம்-2