poolookaththil paralookam varukuthu paru

பூலோகத்தில் பரலோகம் வருகுது
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பூலோகத்தில் பரலோகம் வருகுது பாரு
பரிசுத்தர் இயேசு வந்திருக்கிறாரு
தூதர்களின் கூட்டம் அங்கும் இங்கும் ஆட்டம்
பரிசுத்தர் கூட்டம் இந்த சபையிலே நாட்டம் (2) பூலோகத்துல..
1. பலிபீடம் மீதிலே தேவ சிம்மாசனம்
அந்த சிம்மாசனம் மீதிலே சிம்ம ராஜனாம்
சிம்ம ராஜனாம் யூத ராஜனாம் (2)
அந்த இராஜாதி இராஜனாம் இயேசு ராஜனாம் (2) பூலோகத்துல..
2. சொர்க்க நாட்டின் வேந்தனாம் சொர்க்க நாதரே
அந்த சொர்க்க நாதர் சொல்லிலே சொக்கி போனாரே
தேனின் மதுரமாம் தேவ வார்த்தையாம் (2)
அந்த தேவ வார்த்தையாலே சொர்க்கம் போவாரே (2) பூலோகத்துல..
3. கல்வாரி இரத்தம் ஒழுகுது பாரு
அது சொட்டு சொட்டாய் நம் மேலே வழியுது பாரு
பாவமில்லையே இனி சாபமில்லையே (2)
இயேசுவின் இரத்ததாலே ஜெயம் ஜெயமே… (2) பூலோகத்துல