Poorikai Oothiduvom punnagai mugaththodu

பூரிகை ஊதிடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

பூரிகை ஊதிடுவோம்
புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம்
எக்காள தொனியோடு -2
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயமெடுப்போம் -2 – பூரிகை
1.எக்காளம் ஊதும் போதெல்லாம்
கர்த்தர் நம்மை நினைக்கின்றார்-2
எதிரியின் கையில் இருந்து
காப்பாற்ற படுகின்றோம் -2 – முழங்கிடுவோம்
2.கிதியோன் படைகள் அன்று
பூரிகை ஊதியதால் -2
சிதறி கூக்குரலிட்டு
எதிரிகள் ஓடினார்கள் -2 – முழங்கிடுவோம்
3.எரிகோ மதில்கள் எல்லாம்
இடிந்து விழுகின்றன -2
என் தேசம் இயேசுவுக்கே
என்பது நிச்சயமே -2 – முழங்கிடுவோம்
4.சாலமோன் ஆலயத்தில்
ஏகமாய் துதிக்கும்போது
கர்த்தரின் மகிமையினால்
ஆலயம் நிரம்பியது -2 – முழங்கிடுவோம்