poorrituvoom inru pukazhnthituvoom

போற்றிடுவோம் இன்று புகழ்த்திடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
தேவக்குமாரனை பாடி துதிப்போம்
மானிடம் வளம்பெற ஏழைக் கோலமாய்
தேவ சுதன் இயேசு உலகில் வந்தார்
தூதர் சேனைகள் கீதம் பாடவே
தூய பாலனை துதித்திடுவோம்
துந்துபிகளும் கின்னரமுடன்
புல்லாங்குழல் இசை இயற்றிடுவோம்
போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
நேசக்குமாரனை நாடி துதிப்போம்
வான சாஸ்திரிகள் வந்தனர்
விண்ணில் ஓர் வெள்ளி வழி காட்டிட
மன்னன் தாவீதின் ஊரினில்
கிறிஸ்தேசு பாலகனைக் கண்டு வந்தனர்
இன்னிசை எங்குமே தொனித்திடவே
இனிய பாடலை பாடிடுவோம்
எங்கும் நற்செய்தி கூறிடவே
இந்நாளில் இயேசு பாலன் பிறந்தார்
போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
நேசக்குமாரனை நாடி துதிப்போம்
உன்னத தேவனுக்கு மகிமையாம்
பூமியில் சமாதானம் எங்கும் நிலவ
மானுஷர்மேல் பிரியம் உண்டாம்
கிறிஸ்தேசு பாலகன் இன்று பிறந்தார்
இன்னிசை எங்குமே தொனித்திடவே
இனிய பாடலை பாடிடுவோம்
எங்கும் நற்செய்தி கூறிடவே
இந்நாளில் இயேசு பாலன் பிறந்தார்
போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
தேவக்குமாரனை பாடி துதிப்போம்
மானிடம் வளம்பெற ஏழைக் கோலமாய்
தேவ சுதன் இயேசு உலகில் வந்தார்.