1.poorveekaththil mey paktharaith

பூர்வீகத்தில் மெய் பக்தரைத்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.பூர்வீகத்தில் மெய் பக்தரைத்
தெரிந்து கொண்ட தேவரீர்,
இவ்வேளை உந்தன் தாசரை
அன்பாக ஆசீர்வதிப்பீர்
2.தெரிந்துகொண்ட பக்தர்கள்
எல்லாத் திசையும் சென்றனர்;
ஆவி நிறைந்து அவர்கள்
நற்செய்தி எங்கும் கூறினர்.
3.இவ்வேளை உந்தன் தாசரைத்
தேவாவியாலே நிரப்பும்;
மேலான ஞான வரத்தை
அன்பாகத் தந்து நடத்தும்.
4.அப்போஸ்தலர் விவேகமாய்க்
கர்த்தாவின் வாக்கைக் கூறவே
விரைந்து போன பாங்கினில்
இத்தாசர் கூறச் செய்யுமே.
5.ஜெபத்திலும் விழிப்பிலும்
இடைவிடாமல் நிலைத்தே
தீவர்த்தி போல இவரும்
விளங்கச் செய்யும், யேசுவே.
பூர்வீகத்தில் மெய் பக்தரைத் பாடல் வரிகள், Poorvigaththil Mei Baktharai lyrics