Pottri Thuthi Pugalnthu Thuthi

போற்றித் துதி புகழ்ந்து துதி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி
சரணங்கள்
1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி
2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம்
தீயி லகப்படாமல் தூக்க வந்தார்;
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி
3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே – சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே – அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே – போற்றி
4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற – இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ,
வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ? – போற்றி
போற்றித் துதி புகழ்ந்து துதி பாடல் வரிகள், Pottri Thuthi Pugalnthu Thuthi lyrics