Pottri Ummai Pugalukirean song lyrics

போற்றி உம்மை புகழுகிறேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போற்றி உம்மை புகழுகிறேன்
வாழ்த்தி உம்மை வணங்குகிறேன்
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவர் உம்மைத் தொழுகின்றேன்
உன்னத தேவனே உயர்த்துகிறேன்
வல்லமை தேவனே வணங்குகிறேன்
பரிசுத்தமுள்ள தேவன் உம்மை (2)
பலிகள் செலுத்தி தொழுகின்றேன் – (போற்றி)
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்ச்சியுடனே தொழுகின்றேன் (2)
துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
தூயவர் உம்மை துதிக்கின்றேன் – (போற்றி)
என்னுயிர் காக்க தன்னுயிரை
தானமாய் தந்த தெய்வம் நீரே
எந்நாளும் மாறா இயேசு தேவா (2)
விண்ணாளும் உம்மைத் துதிக்கின்றேன் – (போற்றி)