Pudhu Kirubaigal Um Azhagana Kangal

புது கிருபைகள் தினம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2
1. நேர்வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே
2. பாதங்கள் சருக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழவைத்தீர் – என் இயேசுவே
புது கிருபைகள் தினம் பாடல் வரிகள், Puthu kirubaigal Thinam Lyrics