puthithakkuvar iyesu puthithakkuvar

புதிதாக்குவார் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புதிதாக்குவார் இயேசு புதிதாக்குவார்
சகலத்தையும் அவர் மாற்றிடுவார் =2
ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஸ்தோத்திர பலிகளை செலுத்திடுவேன்
ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆனந்த பலிகளை ஏறெடுப்பேன்
1.பாவத்திலிருந்து என்னை மீட்டிடவே
பரிசுத்த பலியாக பிறந்தவரே
சாபத்திலிருந்து என்னை விடுவிக்கவே
சாட்டையின் கொடூரத்தை தாங்கினீரே
2.கல்வாரி சிலுவையின் நாயகரே
ஜீவனை எனக்காய் தந்தவரே
களங்கமில்லாத அன்பினையே
எனக்காய் கொடுத்து சென்றவரே
3.மணவாளன் இயேசு வருவாரே
மண்ணான மனிதனை உயிர்பிக்கவே
விளக்கில் எண்ணெய் குறையாமலே
விழித்திருந்து ஜெபித்திடுவேன்
புதிதாக்குவார் இயேசு பாடல் வரிகள், Pudhidhaakuvar Yesu lyrics