puthiya puthiya aantukal

புதிய புதிய ஆண்டுகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புதிய புதிய ஆண்டுகள்
தோன்றி தோன்றி மறைந்திடினும்
உம் கிருபை மட்டும் என்னில் மாறாததேனோ
உம் அன்பையே எந்நாளும் பாடுவேன்
உம் கிருபையை எந்நாளும் பாடுவேன்
மறவேன் மறவேன் உம் கிருபையை – 2
1. நெருக்கடி நேரங்களில்
நெருங்கி வந்து உதவி செய்தவரே
தாயாக வந்தீர் தகப்பனாக நின்றீர்
தோளோடு தோள் சேர்த்து துணை செய்தீரே – உம்
2. நம்பிக்கை இழக்கும் நேரம்
நங்கூரமாய் என்னில் வந்தவரே – தாயாக வந்தீர்
3. கைவிடப்படும் நேரம் கைவிடாத
தோழனாய் வந்தீரே – தாயாக வந்தீர்