puthu varushaththai nanmaiyinal

விட்டு விலகலயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புது வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டியே தந்தவரே
வாக்குதத்தங்கள் எல்லாமுமே
வல்ல காரியம் செய்ததினால் -2
சொல்லை செயலாக்கி முடிக்கும் வரை
நீர் கைவிடவே மாட்டடீர் -2
விட்டு விலகலயே விட்டு கொடுக்கலையே
உங்க இரத்தத்தினால் மீட்டெடுத்தத்தினால் -2
நன்மையான எல்லா ஈவும் உம்மிடமிருந்து
எனக்காக எனக்காக எனக்காக வருமே
நன்மையான எல்லா ஈவும் உம்மிடமிருந்து
தடையின்றி தாமதமின்றி இந்தாண்டு வருமே
1.முன்தினதை நான் யோசித்த போது
புதிய காரியம் செய்வேன் என்றீரே -2
பழையவை புதிதானதே
நீங்க தொட்டதால் உயிர்பெற்றதே -2 – விட்டு விலகலையே
2.வியாதியினால் நான் கலங்கின போது
விசுவாசித்தால் நீ பிழைப்பாய் என்றீரே -2
உம் காயங்கள் எனக்காக தான்
உங்க தழும்பாலே குணமாகிறேன் -2 – விட்டு விலகலையே
3.குழந்தை இல்லாத மகளே நீ பாடு
கர்பத்தின் கனியை கொடுப்பாரே இயேசு -2
(அவர் வார்த்தை ) கருவாக உருவாகுமே
உன்னில் சிதையாமல் நிறைவேறுமே -2 – விட்டு விலகலையே