puthu vitiyal piranthathu

புது விடியல் பிறந்தது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Roman Catholic Songs collection.

புது விடியல் பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
புதிய உலகம் படைத்திடவே
இயேசு உயிர்த்தார் -2
சொன்னபடியே மூன்றாம் நாளில்
சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல்
ஒளி கொடுக்கும் கதிரவனை
மறைத்து வைக்க முடியுமா
உயர்ந்து நிற்கும் வானமதை
எட்டிப் பிடிக்க முடியுமா
மின்னுகின்ற விண்மீனை
பறித்தெடுக்க முடியமா
உயிருள்ள இறைமகனை
கொன்று விட முடியுமா
மீட்பர் உயிர்த்ததனை
மறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே
வாடி நின்ற பயிர்களுக்கு
செழுமை தரும் மழையை போல்
வாழ்விழந்த மனிதனுக்கு
வலிமையினை வழங்கினார்
அகழ்வோரை தாங்குகின்ற
பூமித்தாயை போலவே
கருவினிலே நமை தாங்கி
இறுதி வரை காக்கின்றார்
உயிர்த்த இயேசுவிடம்
உன்னை கொடுத்து விடு
உன் நிலை மாற்றிடுவார்
உயர்வினை தந்திடுவார் – புது விடியல்
உயிர்ப்பு பாடல் Easter song Resurrection song
புது விடியல் பிறந்தது பாடல் வரிகள், Puthu vidiyal piranthathu Lyrics