puthumai seyyum punithare

புதுமை செய்யும் புனிதரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

புதுமை செய்யும் புனிதரே
வீர செபஸ்தியாரே
அருள் புரிந்து காப்பது உம்
கருணை கரத்தின் அற்புதமே
நல்லவரே வல்லவரே
தூயவரே – எங்கள் செபஸ்தியாரே
1.வேண்டுவோரின் குறைகள் தீர்த்து
காத்திடும் நல் இதயமே – என்றும்
அருள் புரிந்து பாதுகாத்து
அரவணைக்கும் இமயமே
ஞானத்தோடும் வீரத்தோடும்
காத்திடும் பாதுகாவலரே
2.பிள்ளை போல எம்மைக் காக்கும்
தாயின் அன்பு உருவமே
வெண்பூவைப் போன்ற மென்மையான
கருணை நிறைந்த உள்ளமே
சூழ்ந்து நிற்கும் துன்பம் பனி போல்
மாறியதே உம் பார்வையால்
புதுமை செய்யும் புனிதரே பாடல் வரிகள், Puthumai Seiyum Punitharae Lyrics