puthusa porakkuthu namakkoru kalam – Puthusa porakkuthu Namakoru kaalam

புதுசா பொறக்குது நமக்கொரு காலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam
புதுசா பொறக்குது நமக்கொரு காலம்
பழச மறந்து நடந்திடும் நேரம்
நன்மைகள் செய்தவர்
நம்மோடு இருக்கிறார்
நன்றியை சொல்வோம்
இனியும் நடத்திடுவார்
நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி ராஜா
புது வருஷத்திலும் நன்மைகளால்
போஷித்திடும்
ஆசீர்வாத மழையாய்
இப்பொழுதே பொழிந்திடும்
புது பிறப்பாய் என்னை மாற்றிடும்
வருஷத்தை நன்மையால் கூட்டிடும்
உம் பிரசன்னம் எம்மை நிரப்ப
அந்நிய பாஷை எங்கும் பேசிட
அக்கினி நாவுகள் எம்மில் அணலிட
வரும் தேவா இந்த நேரமே
நிகழ்வது இனி யாவும் நன்மைக்கே
மகிமை இனி யாவும் தேவனுக்கே
புதுசா பொறக்குது நமக்கொரு காலம்
பழச மறந்து நடந்திடும் நேரம்
நன்மைகள் செய்தவர்
நம்மோடு இருக்கிறார்
நன்றியை சொல்வோம்
இனியும் நடத்திடுவார்
நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி ராஜா
HAPPY NEWYEAR 2025