Ragasiyam Ragasiyam

பரம இரகசியம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரகசியம் இரகசியம்
ஒரு பரம இரகசியம்
நம் கிறிஸ்துவானவர்
மகிமையின் நம்பிக்கையாய்
நமக்குள்ளே வாசம் செய்வதே
அந்த இரகசியம். (கொலோ 1:27) -இரகசியம்
சர்வ வியாபிகர்
சர்வ பூமியின் தேவனவர்
ஆனாலும் நம் இதயத்தில்
இயேசு வாசம் செய்வதே இரகசியம். -இரகசியம்
நமக்காக ஜெபித்திட
நம் பெலவீனம் தாங்கிட
ஆவியில் நம்மை நடத்திட
இயேசு வாசம் செய்வதே இரகசியம் -இரகசியம்
தேவன் தங்கிடும்
தேவ ஆலயம் நாம்தானே
ஆவியால் நம் சரீரத்தால்
மகிமை படுத்துவோம் தேவனை (1கொரி 6:19,20) -இரகசியம்