Sabaiyorae Ellarum Kartharai

சபையோரே எல்லாரும் கர்த்தரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2)
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2)
சபையோரே எல்லாரும்
1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2)
அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்- சபையோரே எல்லாரும்
2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)
ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்
ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார் – சபையோரே எல்லாரும்
3.நமது கர்த்தரோ உறைவிடமானார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)
விடுதலை கீதங்கள் பாடல் வைக்கிறார்
வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார் – சபையோரே எல்லாரும்
4.சொந்த மகன் என்றும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே (2)
அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பது நிச்சயம் தானே – சபையோரே எல்லாரும்
5.தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
உணவும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் – (2)
எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார் – சபையோரே எல்லாரும்