sakalaththaiyum nerththiyakave

சகலத்தையும் நேர்த்தியாகவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகலத்தையும் நேர்த்தியாகவே,
அதிநதின் காலத்தில் செய்பவர்,
என்னை என்றும் அவர் உள்ளத்தில்,
ஆதி முதல் அந்தம் நினைப்பவர்,
என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,
சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2)
1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,
நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,
என் துவக்கம் அர்ப்பமானாலும்,
அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்)
2) நித்தமும் என்னை நடத்துவார்,
மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,
நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,
அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார் (2)…. (என் இயேசு நல்லவர்)
சகலத்தையும் நேர்த்தியாகவே பாடல் வரிகள், Sakalathayum Naerthiyaakavae Lyrics