sakalavitha pavangkalai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

சகலவித பாவங்களை
அகல வைத்தவர்
தன் இரத்தத்தாலே
என்னை சுத்திகரித்தவர்-2
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
நண்மையானதை எனக்கு தருபவர்
உண்மையானதை நாட செய்பவர்
பெரும் தன்மையோடு அனைவரோடும் பழக செய்பவர்
மிக அண்மையிலே இருந்து என்னை ஆதரிப்பவர்
மிக அண்மையிலே இருந்து என்னை ஆதரிப்பவர்
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
-சகலவித பாவங்களை
தேவ சிந்தையை நிதமும் கொடுத்தவர்
பிறரை நெயமுடன் விசாரிக்கும் இதயம் கொடுத்தவர்
தூய ஜீவனுள்ள தேவனாக என்னுள் இருப்பவர்
இந்த மாயையான உலக வாழ்வை மறக்க செய்தவர்
மாயையான உலக வாழ்வை மறக்க செய்தவர்
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
-சகலவித பாவங்களை
நிந்தையிலும் நெருக்கத்திலும் என்னை மீட்டவர்
தன் சொந்த பிள்ளையாக தோலில் சுமந்துக்கொள்பவர்
என்னை அந்தகார இருளில் நின்று விலக்கி காப்பவர்
அவர் எந்த நாளும் எந்தன் மீது கிருபை உள்ளவர்
அவர் எந்த நாளும் எந்தன் மீது கிருபை உள்ளவர்
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
அவர் தான் இயேசு..
-சகலவித பாவங்களை