Samathana Prabhuvae

சமாதான பிரபுவே என் இயேசு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs collection.

சமாதான பிரபுவே சமாதான பிரபுவே
என் இயேசு இராஜனே
பேரின்ப நதியே பேரின்ப நதியே
என் இயேசு இராஜனே-2
என் இயேசு இராஜனே-2
இராஜாதி இராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
என் இயேசு இராஜனே-2
1.இரட்சிப்பின் ஊற்றிலே
மகிழ்ச்சியின் தண்ணீரை
மொண்டு கொள்வோமய்யா
பேரின்ப நதியில்
தாகம் தீர்த்திடும்
ஜீவ தண்ணீர் நீரே
தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை
என் தெய்வம் நீர்தானய்யா-2
என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான
2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்
ஜீவ தண்ணீர் ஓடும்
அமர்ந்த தண்ணீரண்டை
நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே
சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி
ஆயத்தம் செய்திடுவீர்-2
ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான
3.தமது ஜனத்திற்கு
பெலன் கொடுத்து
சமாதானம் தந்திடுவீர்
தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம்
நீக்கிடுவீரய்யா
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
சிறுமையானவன் தாகம் தீரும்-2
சிறுமையானவன் தாகம் தீரும்-சமாதான