sammathame iraiva ....sammathame thalaiva

சம்மதமேஇறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

சம்மதமே இறைவா ....சம்மதமே தலைவா,....
உம் மாலையிலே ஒரு மலராகவும் ...பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே.......இறைவா மாறிட சம்மதமே.....சம்மதமே தலைவா...
தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் ...(2)
கருவாக எனை படைத்தது உயர் கண்மணியாய் எனை வளர்த்து ...(2)
கரமதிலே உருப்பதித்து கருத்துடனே என்னை காக்கின்றாய் ...
சம்மதமே இறைவா...............ஆ.....
மலையாய் நான் கணித்த பெரும் காரியமும் உயர் காவியமும் மறைந்தே போனது(2 )
திருவாக உன்னை நிணைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து (2)
உன் பெயரை சாற்றிடவே நலம் பெறவே என்னை அழைக்கின்றாய் ....
(சம்மதமே இறைவா)