Saranam Aiya Devanae Sarva valla devanae song lyrics

சரணம் ஐயா தேவனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சரணம் ஐயா தேவனே
சர்வ வல்ல தேவனே – (2)
பாவம் தீர ஜீவன் விட்ட
ஜீவனுள்ள தேவனே – (2)
இயேசுவே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்!
பரிசுத்தத்தை சிநேகிக்கும்
பரிசுத்தராம் தேவனே – (2)
இதய சுத்தம் என்னில் காண
என் உள்ளத்தில் இன்று நீர் – (2) – இயேசுவே
நித்தம் எம்மை நடத்துவீர்
நம்பினோரை கைவிடீர் – (2)
மக்கள் எல்லாம் உம் படைப்பு
ஒருவரையும் புறக்கணீர் – (2) – இயேசுவே
நொறுங்கிப் போன வாழ்வையும்
புதியதாக மாற்றுவீர் – (2)
நொந்துபோன குடும்பங்களையும்
மீண்டும் வாழச் செய்குவீர் – (2) – இயேசுவே
ஜெயம் கொடுக்கும் தேவனே
கரம் கொடுத்து நடத்துவீர் – (2)
ஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண
என்னுடனே இன்று நீர் – (2) – இயேசுவே
அற்புதங்கள் செய்குவீர்
அதிசயங்கள் காட்டுவீர் – (2)
இம்மையிலும் மறுமையிலும்
எங்களை நீர் நடத்துவீர் – (2) – இயேசுவே