Sarva Vallavarae En Piriyam Neerae song lyrics

சர்வ வல்லவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானத்துக்கும் பூமிக்கும் சகல அதிகாரம் படைத்த
சர்வ வல்லவரே எங்கள் தேவனே
என்றும் நடத்துபவர் நீரல்லவோ
என்னை காண்கிறவர் நீரல்லவோ
என்னை விசாரிக்க நீரல்லவோ
1.நேற்றும் இன்றும் என்றும் நடத்துபவர் நீரே
எல்லா சூழலிலும் நடத்துபவர் நீரே
நீரே என் தெய்வம் நீரே என் ராஜா
2.தினம்தோறும் கண்மணிப்போல் காப்பவரும் நீரே
எங்களை என்றென்றைக்கும் காப்பவரும் நீரே
கைவிடாத தெய்வம் கடைசி வரை காப்பார்
நீரே என் தெய்வம் நீரே என் ராஜா
3.எங்களை விசாரிக்கும் தெய்வம் நீரே
எங்களை போஷித்திடும் தெய்வம் நீரே
எப்பொழுதும் உமக்கு நன்றிகளை சொல்லுவோம்
நீரே என் தெய்வம் நீரே என் ராஜா