Satham Kettu Sitham Seyya Alaikirare

சத்தம் கேட்டு சித்தம் செய்ய

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கின்றாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கின்றாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
சரணங்கள்
காலத்தின் வேகத்தை பார்க்கும் போது ஆ ஆ கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே
1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ
ஆ ஆ கற்பனைகள் யாவும் நன்றல்லவோ
அதை கடைப்பிடித்தாக வேண்டுமே
கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்கு சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் – சத்தம்
2. உலக மாமிசப் பிடியினின்றும்
ஆஆ உலக மாமிசப் பிடியினின்றும்
பண பிசாசின் தந்திர வலையினின்றும்
விடுவித்துக் கொள்வோம்
செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்திடுவோம்
மெழுகைப் போல உருகி விடுவோம். – சத்தம்
3. தேவை அதிகம் ஏராளம் ஆ ஆ
தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
குஜராத் பீஹார் இமயத்தில் ஏராளம் ஏராளமே
ராஜஸ்தான் காஷ்மீர் ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார் – சத்தம்
4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு ஆ ஆ
வெற்றியே தரும் ஆண்டவர்க்கு
நம்மை காணிக்கையாக்கிடுவோம்
உடல் பொருள் யாவும்
இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
தேசம் இயேசுவை கண்டு விடும்
சபைகள் ஏராளம் பெருகி விடும் – சத்தம்