seeyoonil irunthu isravelukku

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs, Praise Songs and Worship Songs collection.

சீயோனில் இருந்து இஸ்ரவேலுக்கு
ரட்சிப்பு வந்ததே
தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பை
மீண்டும் திருப்பினாரே
எனவே களிப்போம் மகிழ்வோம்
உன்னத தேவனில்
ஆர்ப்பரித்துக் கொண்டாடிடுவோம்
1. பார்வோனின் சேனைகளைக் காணவில்லையே
செங்கடலில் அழிந்ததே
தேவன் தம்முடய ஜனத்தை நடத்தினாரே
உலர்ந்த ஆழியின் நடுவிலே – எனவே
2. முன்னின்ற யோர்தானும் பின்னிட்டதே
தேவனின் புயத்தாலே
இஸ்ரவேலின் ஜெயபலமானவரே
தண்ணீரைத் தரையாய்
மாற்றினாரே – எனவே
3. நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்குத் திரும்புங்களேன்
இரட்டிப்பான நன்மைகளை தருவாரே
இன்றைக்கு தந்திடுவாரே – எனவே