seitha nanmai ninaikintrenlyrics

செய்த நன்மை நினைக்கின்றேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

செய்த நன்மை நினைக்கின்றேன் என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா இறைவா இறைவா
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் ஒரு
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் உடன்
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்து வந்தாய்