Senaigalin Karthare Nin

சேனைகளின் கர்த்தரே நின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
சேனைகளின் கர்த்தரே ! நின்
திருவிலம் அளவற இனிதினிதே!
அனுபல்லவி
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை
சரணங்கள்
1.திருவருளிலமே , கணுறும் உணரும்
தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -சேனை
2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய .- சேனை
3.புவியோர் பதிவான் புகநிதியே !
புனருயி ருறுமுழுக் கருளினிதே!
புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !
புரிவோடு இனிதருள் ! -சேனை
4.பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவேனே; எனச்சொலி
பேனிடத்துணை ஈவையே !
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே, திடமளியே!
பெருமலையினிலரு முயிர் தரும் .- சேனை
5.ஆலய மது நிறைவாக ,
அவைக் குறை வொழிநதேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ,
ஆலய பர னேச
ஆசுக மது வீச,
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது?- சேனை