senrar senrar manuvel – Sentraar Sentraar Manuvel

சென்றார் சென்றார் மனுவேல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சென்றார் சென்றார் மனுவேல் – Sentraar Sentraar Manuvel
பல்லவி
சென்றார், சென்றார் மனுவேல்;-பரலோகம்
சென்றார், சென்றார் மனுவேல்.
அனுபல்லவி
சென்றார், சென்றார், சீஷர் குன்றின் மீதில் நின்று,
என்று காண்போம், என்று ஒன்றி வானம் நோக்க; -சென்
சரணங்கள்
1.வானலோகம் துறந்து, இகழ்ச்சிக்குள்-ளான லோகம் பிறந்து, தானம் நிதி நிறைந்து,-வளர்ந்திட-ஞானமதனில் உறைந்து,
தீன உலகை வென்று, ‘பீனக்குருசை நேர்ந்து
தேனரோடே மாய்ந்து, ஈனக்கல்லறை சேர்ந்து,
ஊனம் இன்றி மின்னி, ‘பானுபோலத் தேர்ந்து
தானலோகம் செல்ல, மானமேகஞ் சார்ந்து,
2. தேவ தூதர் தொழவே, மகாத்மாக்கள்-பாவநாசன் எனவே,
தாவி அவரும் எழவே,-அவர் துதி-ஓவல் இன்றி விழவே
பாவம் போக்கும் ரத்தம் பாத்திரமதனில் மொண்டு,
மேவும் ஆசாரியர் மிக சுத்த தலம் கண்டு;
தேவ கிருபைக்காக ஜெபித்தார்களே பண்டு;
ஆவலாய்க் காயங்கொண்டு, அவ்விதம் செய்யத் தொண்டு