shekkina makimaiyal ennai mootukireer

ஷெக்கினா மகிமையால் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஷெக்கினா மகிமையால் என்னை மூடுகிறீர்
ஆனந்த தைலத்தை சிரசில் ஊற்றுகிறீர்
அளவுக்கடங்காத உந்தன் தேவ பிரசன்னம்
மேகமாய் இறங்கி வரும் இந்த வேளையில்
உடல் எல்லாம் சிலுக்குது உயிரெல்லாம் துடிக்குது
எத்தனை ஆனந்தம் எத்தனை ஆனந்தம் உந்தன் சமூகமே
பகலிலே மேகஸ்தம்பம் என்னை நடத்துது
இரவிலே அக்கினி ஸ்தம்பம் நடத்துது
வழி எல்லாம் தெரியுது வல்லமை விளங்குது
எத்தனை அதிசயம் எத்தனை அதிசயம் உந்தன் நடத்துதல் (யாத் 13:21-22)
சிரசிலே ஊற்றப்படும் உந்தன் தைலமே
அக்கினி சாட்சியாய் என்னை மாற்றுதே
வரங்களால் நிரப்புது தரிசனம் தெரியுது
எத்தனை அதிசயம் எத்தனை அதிசயம் உந்தன் அபிஷேகம்
வானத்தின் பலகணிகள் இப்போ திறக்கிறீர்
ஆசீர்வாதம் அளவில்லாமல் பெறுகிறேன்
சாபங்கள் நீங்குது சந்தோஷம் பெருகுது
எத்தனை அதிசயம் எத்தனை அதிசயம் உந்தன் இரக்கமே (மல்கியா 3:10)
எண்ணிலடங்காத நன்மை என்னை நிரப்ப
என்னை அறியாமல் நடனமாடி துதிக்கிறேன்
ஸ்தோத்திரம் செலுத்தியே இயேசுவை பணிகிறேன்
எத்தனை ஆனந்தம் எத்தனை ஆனந்தம் இயேசுவின் சமூகமே
ஷெக்கினா மகிமையால் என்னை பாடல் வரிகள், Shekinah Magimaiyaal Ennai Lyrics