Singasanathirkul Piravesikka Lyrics

சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிங்காசனத்திற்குள் நான் பிரவேசிக்க
அழைத்து செல்வார் என் நேசர் இயேசு
மேகத்தினில் தூதர்களோடு
எக்காளம் தொனிக்க இறங்கி வருவார்
அனைத்துக் கொள்வார் – என்னை
அழைத்து செல்வார் அவரோடு கூட
என்னை உட்கார செய்வார்
மீறுதல்கள் யாவும் எனக்கு மன்னித்து
பரிசுத்த கிரீடம் என் தலையில் வைத்து
சித்திர கையாலடை உடுத்துவித்து
தூதர்களோடு என்னை அழைத்து செல்வார் –அனைத்துக் கொள்வார்
புறம்பான அழகை என்னுள் மாற்றி
பரிசுத்த மின்னமையை என்னில் அகற்றி
மரணத்தின் வாசல் வழியாய் என்னை அனுப்பி
சிங்காசன வாசலில் வரவேற்பார் என்னை -அனைத்துக் கொள்வார்
முற்பிதாக்களோடு என்னை சேர்த்து வைத்து
அவரோடு கூட என்னையும் மகிழ்விப்பார்
அழியா ராஜ்யத்தில் கூட்டிச் சென்று
நித்திய காலமாய் வாழ செய்வார் என்னை
அனைத்துக் கொள்வார்