sinna kuzhanthai yesuvukku – Chinna Kulandhai Yesuvukku

சின்ன குழந்தை யேசுவுக்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சின்ன குழந்தை யேசுவுக்கு – Chinna Kulandhai Yesuvukku
சின்னக் குழந்தை இயேசுவுக்கு
என்ன கொடுப்பது(நாம்)-2
மலரைப் படைத்த மழலைக்கு
மலரைக் கொடுப்பதா -2
கனியைப் படைத்த கண்மணிக்கு
கனியைக் கொடுப்பதா
குரலைக் கொடுத்த குழந்தைக்கு
இசையை எழுப்பவா -2
விரலைக் கொடுத்த விமலனுக்கு
வீணை மீட்டவா
புவியைப் படைத்த பரமனுக்கு
புவியைக் கொடுப்பதா -2
பகலும் இரவும் அவன் புகழைப்
பாடித் தொழுவதா
என்னை படைத்த இறைவனுக்கு
என்னை கொடுக்கவா