sinna sinna pookkale

சின்ன சின்ன பூக்களே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs and Roman Catholic Songs collection.

சின்ன சின்ன பூக்களே
சிறகடிக்கும் சிட்டுக்களே
சிங்காரமாய் நடைபோடுங்கள்
நீங்கள் சிரித்து சிரித்து என்றும் வாழ்ந்திருங்கள் -2
1. இயேசுவோடு இணைந்திருந்தால் இன்பமாக வாழ்ந்திடலாம்
அவர் தானே திராட்சை செடி நாமெல்லாம் அதன் கிளைகள் – 2
கொடியோடு இணைந்தாலே கிளைகலெல்லாம் கனி தருமே
நாம் கூட இறையன்பில் நிலைத்திருந்து பயன் தருவோம்
சின்ன சின்னப் பூக்களே
சிறகடிக்கும் சிட்டுக்களே
சிங்காரமாய் நடைபோடுங்கள்
நீங்கள் சிரித்து சிரித்து என்றும் வாழ்ந்திருங்கள் – 2
2. இறை வார்த்தை பாறைமீது இல்லம் காண்போர் அறிவாளி
மணல் மீது இல்லம் கண்டால் இடிந்து போகும் இது நீதி – 2
பெரு மழையோ புயல் காற்றோ எது வந்து தாக்கிடினும்
நாம் மட்டும் அவர் சொல்லில் உறுதியாக நிலைத்திருப்போம்
சின்ன சின்னப் பூக்களே
சிறகடிக்கும் சிட்டுக்களே
சிங்காரமாய் நடைபோடுங்கள்
நீங்கள் சிரித்து சிரித்து என்றும் வாழ்ந்திருங்கள் – 2
சின்ன சின்னப் பூக்களாய்
சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சிங்காரமாய் நடைபோடுவோம்
நாங்கள் சிரித்து சிரித்து என்றும் வாழ்ந்திடுவோம் – 2
RC Catholic VBS Tamil Song With Lyrics சின்ன சின்ன பூக்களே – China China Pukalae