Sinna Siriya Padagu

சின்னஞ் சிறிய படகு ஒன்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சின்னஞ் சிறிய படகு ஒன்று
நீந்திக் கடலில் சென்றதம்மா
இயேசுவை சீடரை சுமந்து கொண்டு
இனிதே அசைந்து விரைந்ததம்மா
1.பொங்கி அலைகள் எழுந்ததம்மா
அங்கும், இங்கும் அசைந்ததம்மா
புயலைக் கண்டு சீடரெல்லாம்
பயந்து, கலங்கி நின்றாரம்மா
2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு
இரையும் கடலை அதட்டிடவே
பொங்கிய கடலும் ஓய்ந்ததம்மா
எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா
3.வாழ்க்கை என்னும் படகில் இயேசு
என்றும் என்னோடிருப்பாரம்மா
துன்பங்கள் ஏதும் வந்தாலும்
பயமே எனக்கு இல்லையம்மா