sinnanysiru theepam – Chinnajsiru Deepam

சின்னஞ்சிறு தீபம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
சின்னஞ்சிறு தீபம் நீ எழும்பி பிரகாசி – 2
கர்த்தரின் மகிமை உன்மேல் உதிக்கையில் – 2
1. சோதனை காற்று வந்தாலும்
வேதனை வாழ்க்கை ஆனாலும்
வேந்தனை போற்றியே நீ எழும்பி பிரகாசி
சூரியன் அஸ்தமித்தாலும்
சந்திரன் மறைந்திட்டாலும்
நித்திய தீபமாய் நீ எழும்பி பிரகாசி
காரிருள் மூடியே இருளில் நான் தோன்கிறேன்
உம் ஒளி என்மேல் வீசுமே தேவா
2. கண்ணீரில் கண்கள் கரைந்தாலும்
பகைவரின் படை சூழ்ந்தாலும்
பரமனை போற்றியே நீ எழும்பி பிரகாசி
எல்லைகள் இடம் பெயர்ந்தாலும்
யாவரும் உன்னை மறந்தாலும்
உன் தேவனை போற்றியே நீ எழும்பி பிரகாசி
சேனைகளின் கூட்டணி உந்தன் வசம் ஆகுமே
சின்னவன் பாடல் கேளுமே தேவா – Chinnasiru deepam