Song Scale - A Minor , Tempo : 95

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே
வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே - (2)
1. என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே - Chorus (வார்த்தை தந்தவரே)
2. நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே - Chorus (வார்த்தை தந்தவரே)
3. உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து தினம் உம்மோடு சஞ்சரிப்பேன் - Chorus (வார்த்தை தந்தவரே)