Sonnadhai Seivaar

சொன்னதை செய்வார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar
Scale – F minor
அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார் – 2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்
1) பொறுத்தும் பாத்தாச்சு
வயசும் ஆகிப்போச்சு
கர்ப்பம் செத்துப்போச்சு
கண்ணீரும் பெருகிப்போச்சு
பொருத்தும் பார்த்து பார்த்து
வயசும் ஆகிப் போயி
கர்ப்பம் செத்து போயி
கண்ணீரும் பெருகி போச்சா
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ – 2
2)ஜெபித்தும் பாத்தாச்சு
நாட்களும் ஓடிப்போச்சு
நெருக்கம் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப்போச்சு
ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ