soorai setikaloo

சூறை செடிகளோ
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சூறை செடிகளோ
சிங்கத்தின் கெபிகளோ
கசந்த மராவோ
சேதப்படுவதில்லை நான்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
ஜீவனுள்ள தேவனை நான் நம்பிடுவேன்
சொல்லிடுவேன் நான் சொல்லிடுவேன்
வார்த்தையின் வல்லமையை சொல்லிடுவேன்
1. வனாந்திர பாதையில் தவித்திடும் வேளையில்
கண்ணீரின் மத்தியில் வார்த்தையை அனுப்புவார்
காத்திடும் கர்த்தரே பாதுகாத்திடுவார்
2. இக்கட்டு நாட்களில் உதவிடும் தெய்வமே
மனுஷனின் உதவியோ விருதாவாய் போகுமே
பராக்ரமம் செய்யவோமே வல்லவர் ஆவியாலே
3. தேவனின் செயல்களை வந்துதான் பாருங்கள்
நடப்பிக்கும் கிரியையில் பயங்கரமானவர்
காற்றையும் கடலையும் அதட்டிடும் நாமமே
4. உமது நீதியை என்றென்றும் நிலைக்குமே
உமது மகத்துவமே ஆராய்ந்து முடியாததே
கர்த்தரின் நாமமே பலத்த துருகமே
சூறை செடிகளோ பாடல் வரிகள், Soorai Chedigalo Lyrics