sukam alippavare

சுகம் அளிப்பவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுகம் அளிப்பவரே
கருணை உள்ளவரே
என் கரத்தை பிடித்து நடத்துபவரே
நீர் அதிசயமானவரே
என்னை ஆளுகை செய்பவரே
என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே
ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
மேன்மையானவரே
மனம் இறங்குபவரே
என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே
நீர் வாக்கு மாறாதவரே
நீர் வல்லமை உள்ளவரே
என் காரியங்களை வாய்க்க செய்பவரே
ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
உண்மையுள்ளவரே
உறுதியாய் இருப்பவரே
என் சார்பில் யுத்தம் செய்பவரே
நீர் ஒப்பற்றவரே
நீர் ஒளியாய் இருப்பவரே
என் எல்லா தீங்கிற்கும் விலக்கிக் காப்பவரே
ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
பரிசுத்தர் பரிசுத்தரே
நீர் ஒருவர் பாத்திரரே
என் பாவங்கள் அனைத்தையும் சுத்திகரித்தீரே
நீர் பராக்கிரமம் நிறைந்தவரே
எந்தன் பாதுகாவலரே
என்னை வாழ வைக்கும் அற்புதர் இயேசுவே
ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
சுகம் அளிப்பவரே
மேன்மையானவரே
உண்மை உள்ளவரே
எங்கள் அதிசயமானவரே
ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
சுகம் அளிப்பவரே பாடல் வரிகள், Sugamalipavarae Lyrics