suthanthiram unmai suthanthiram – Suthanthiram Unmai Suthanthiram

சுதந்திரம் உண்மை சுதந்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுதந்திரம் உண்மை சுதந்திரம் – Suthanthiram Unmai Suthanthiram
சுதந்திரம் சுதந்திரம் உண்மை சுதந்திரம் எது?(2)
அடிமைத்தனம் களைந்து மனிதநேயம் மலர்வது சுதந்திரம்(2)
பாரதம்(2)
வந்தே மாதரம்
பாரதம்(2)
இயேசுவின் பாரதம்
பாரதம்(2)
வந்தே பாரதம்…ஓஹோ
ஆயுதம் ஏந்தும் கரங்கள்
திருமறை இன்று ஏந்தட்டும்
களவுகள் கொலைகள் மாறி
பொதுவுடமை மலரட்டுமே(2)
ஒற்றுமை எங்கும் வளரட்டும்
ஒற்றுமை எங்கும் ஓங்கட்டும்(2)
பாரதம்
இருளில் வாழும் மனிதர்
இறைவரின் அருளால்
எழும்பட்டும்
பகைமை பெருமை நீங்கி
வளமாய் வாழட்டுமே(2)
நம்பிக்கை எங்கும் மிளிரட்டும்
நம்பிக்கை எங்கும் நிலைக்கட்டும்(2)
பாரதம்.