Suththa Aavi Enni Thangum

சுத்த ஆவி என்னில் தங்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,
நானும் சுத்தன் ஆகவே :
பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;
உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்
வாசம் பண்ணும் நித்தமும்
2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,
நானும் சத்யன் ஆகவே :
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச் செய்யுமே :
நீர் என்னில் பிரவேசியும் ,
ஆண்டு கொள்ளும் நித்தமும் .
3. நேச ஆவி , என்னில் தங்கும்
நானும் நேசன் ஆகவே :
துர்ச் சுபாவம் போகப் பண்ணும் :
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும் ,
மென் மேலும் வளர்ந்திடும்.
4. வல்ல ஆவி என்னில் தங்கும் ;
நானும் வல்லோன் ஆகவே ;
சாத்தான் என்னை தூண்டிவிடும்
போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும்
என்னை பலப்படுத்தும்.
5. நல்ல ஆவி என்னில் தங்கும்
நானும் நல்லோன் ஆகவே ;
பகை மேட்டிமை , விரோதம்
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்ட கற்றுமேன்,
என்னை சீர்ப்படுத்துமேன்
6.தெய்வ ஆவி என்னில் தங்கும்
நானும் உம்மில் தங்கவே
மோட்ச பாதையில் நடத்தும்
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்
என்னை முற்றும் ரட்சியும்