suvisetam kooruvoom vareer – Suvishedam Kooruvom Vaareer

சுவிசேடம் கூறுவோம் வாரீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுவிசேடம் கூறுவோம் வாரீர் – Suvishedam Kooruvom Vaareer
பல்லவி
சுவிசேடம் கூறுவோம், வாரீர்;-கன
தேசிகரே, உப தேசிகரே, நாம்.
அனுபல்லவி
திடமாயிப் ‘புடவியிலே திரு
வசனத்தையே விதைசெயவே நாம்
சரணங்கள்
1.ஏசுகிறிஸ்தின் நாமத்தைச் சகல பேர்க்கும்
எடுத்துரைப்போம் போதமாய்;
தேசமெங்கும் சுற்றி நேசமாக வெற்றி
தேசத்தில் அஞ்ஞான மகற்றிட,
நேசகிறிஸ்தேசுவைப் போற்றிட
2.காணாத ஆட்டையும் பார்ப்போம்; கண்டால் அதையும்
கர்த்தன் மந்தையினில் சேர்ப்போம்;
தானாய் அலையும் அஞ்ஞான ஜாதியைச்
சந்தித் தவருடனுறவாடியே,
முந்திப் பவமற வதைத் தேடியே
3.பூமி மீதெங்கு மெட்டுவோம்; சுவிசேடத்தின்
புனித வலையைக் கட்டுவோம்;
‘தாமசமின்றி வந்த சகலரைச் சீடராக்கித்
தருணம் இது குணப்பட ஏவி,
தரை மீதினில் யாவரும் மேவி