suzhal karru ezhunthalum – Suzhal kaatru Elunthalum

சுழல் காற்று எழுந்தாலும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum
கலங்காதே நண்பனே நீ கலங்காதே
சுழல் காற்று எழுந்தாலும்
அலைகள் மோதினாலும் கலங்காதே நண்பனே
சூழ்நிலை கண்டு கலங்காதே
கலங்காதே நண்பனே
சூழ்நிலை கண்டு கலங்காதே
காற்றையும் கடலையும் அதட்டிடும் நம் இயேசு
நம்மோடு கூட உண்டு
இப்போதும் கூட உண்டு
எப்போதும் கூட உண்டு
எழுந்திடுவார் அதட்டிடுவார்
அமைதி உண்டாகிடும்
அமைதி உண்டாகிடும் மிகுந்த
அமைதி உண்டாகிடும் நண்பா அமைதி உண்டாகிடும் – சுழல் காற்று
காற்றும் கடலும் கீழ்ப்படியும் நம் யேசுவுக்கு
இயற்கையின் வல்லமையும் மடிந்திடும் நம் யேசுவுக்கு
பிரச்னை யாவும் மாறிடுமே
துன்பங்கள் எல்லாம் ஓய்ந்திடுமே – கலங்காதே நண்பனே
குடும்பத்தின் குழப்பங்கள் மாறிவிடும் நம் யேசுவினால்
குதூகலம் கொண்டாட்டம் வந்துவிடும் நம் யேசுவினால்
குறைவுகள் எல்லாம் நிறைவாகும்
குடும்பத்தில் அமைதி பிறந்திடுமே – கலங்காதே நண்பனே