Thaazhmai roopam eduthavare

தாழ்மை ரூபம் எடுத்தவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

தாழ்மை ரூபம் எடுத்தவரே
பிதாவின் மகனாய் வந்தவரே
தன் உயிர் நமக்காய் கொடுத்தவரே
உயிர்த்தெழுந்த நாள் இதுவே
தாழ்மை ரூபம் எடுத்தவரே
உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரே
என்று சாவின் கூர் முறித்து எழுந்தீரே -2
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய்
கல்வாரி சிலுவை மீதிலே -2
மூன்றாணிகளு தொங்கியே
தன் ஜீவன் நமக்காய் தந்தவரே-2 – உயிர்த்தீரே
வானக தூத சேனை கூட்டமே
ஒன்றாக வாருங்கள் என் கூடே -2
ராஜன் இயேசுவை வாழ்த்தியே
வான்மொழி அழகாய் சூட்டுங்களே -2 – உயிர்த்தீரே
தாழ்மை ரூபம் எடுத்தவரே பாடல் வரிகள், Thazhmai Roobam Eduthavarae Lyrics