Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar

தடைகளை உடைக்கிறவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் (2)
கைவிடப்படுவதில்ல கதறி நீயும் துடிப்பதில்ல (2)
உங்கள் ராஜா முன்னே போவார்
வழிகளையும் திறந்திடுவார் (2) – தடைகளை
வலப்பக்கம் இடப்பக்கமாய் இடங்கொண்டு பெருகிடுவாய்
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் (2)
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் – உங்கள் ராஜா
குடும்பத்தின் போராட்டங்கள் மறைந்திட உதவிசெய்வார்
கோடா கோடியாக பெருகிடச் செய்திடுவார் (2)
கோடா கோடியாக பெருகிடச் செய்திடுவார் – உங்கள் ராஜா
பிள்ளைகள் அனைவரையும் அணைத்து மகிழ்ந்திடுவார்
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் (2)
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் – உங்கள் ராஜா