Thaeti Iyaesu Vanthaar

தேடி இயேசு வந்தார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார் – என்னை
நோயின் பிடியினிலே
நான் வாடி தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான் -2
எத்தனை ஆண்டுகளோ
நான் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகாராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை
தேடி இயேசு வந்தார் பாடல் வரிகள், Theadi Yesu Vanthaar Lyrics