thai than balaganai

தாய் தன் பாலகனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாய் தன் பாலகனை மறப்பாளா
அவள் மறந்தாலும் -2
தேவன் உன்னை மறப்பதில்லை
உன் கஷ்டத்திலிருந்து வா
உன் துன்பத்திலிருந்து வா
மன உளைச்சலிருந்து வா
உன் பாவத்திலிருந்து வா
வா வா வா கிறிஸ்துவினண்டை நீயும் வா
உனக்காகவே சிலுவையிலே
இயேசு கிறிஸ்து மரித்தார்
வா..வா..வா.. கிறிஸ்துவினண்டை நீயும் வா
1.நீ செய்யும் பாவத்தால் பாவபாரம் அதிகமாகும்
உன் பாவ பாரத்தினால்
உன் வேதனை அதிகமாகும் அதிகமாகும்
உன் வேதனை அதிகமானால்
மனசஞ்சலம் அதிகமாகும்
மனசஞ்சலத்தோடு
மகிழ்ச்சியின்மையும் அதிகமாகும்
மகிழ்ச்சி வேண்டுமா!
நிம்மதி வேண்டுமா
சந்தோஷம் வேண்டுமா!
நீ வா.. நீ வா (2)
2. நீ செய்யும் பாவங்கள் தலைமுடியிலும் அதிகமாகும்
செய்த பாவத்தின் தண்டனை
அதனிலும் அதிகமாகும் அதிகமாகும்
பாவ மன்னிப்பை அடைந்திட்டால்
தேவ சமாதானம் அதிகமாகும்
தேவ சமாதானத்தோடு சந்தோஷமும் அதிகமாகும்
மன்னிப்பு வேண்டுமா!
இரக்கம் வேண்டுமா!
அன்பு வேண்டுமா!
நீ வா.. நீ வா (2)
தாய் தன் பாலகனை பாடல் வரிகள், Thai Than Balaganai lyrics