thakam theerkkum thalaivane

தாகம் தீர்க்கும் தலைவனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

தாகம் தீர்க்கும் தலைவனே
தரணி ஆள வந்தவனே
வாருமே எனில் வாருமே
அமைதி இதயம் தாருமே
1.பாதம் வந்தேன் பணிந்து நின்றேன்
பாதை காட்டும் தலைவனே
பாசம் கொண்டேன் பரிவும் கண்டேன்
பாவம் விலக்கி தாங்குமே
எந்நாளும் என்னுள்ளம் நீ ஆள வேண்டும்
எந்நாளும் உன் சிறகால் எனை காக்க வேண்டும்
2.அன்பு செய்தேன் அமைதி கண்டேன்
ஆற்றல் முழுதும் உம்மிலே
தியானம் செய்தேன்
ஞானம் கண்டேன்
ஆன்ம வழியில் ஆனந்தமே
எந்நாளும் உம் அன்பை நான் தேட வேண்டும்
உன் நாமம் எந்நாளும் நான் பாட வேண்டும்