thampi thangkay unakkuth theriyuma – Thambi Thangaai Unakku Theriyuma

தம்பி தங்காய் உனக்குத் தெரியுமா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தம்பி தங்காய் உனக்குத் தெரியுமா – Thambi Thangaai Unakku Theriyuma
தம்பி தங்காய் உனக்குத் தெரியுமா?
ஆறு நாளில் நடந்த அதிசயம்
ஆறு நாளில் என்ன நடந்தது?
1.ஒன்றாம் நாளில் இருள் அகல வெளிச்சம் படச்சாரு
இரண்டாம் நாளில் தண்ணீர் பிரிய வானம் படச்சாரு
மூன்றாம் நாளில் புல் பூண்டு கனிகள் படச்சாரு
மூன்று நாளின் படைப்பைப் பார்த்து இறைவன் மகிழ்ந்தாரு – 2 ஆஹா……….அப்படியா…….. அப்புறம்…..
2.நான்காம் நாளில் வான்வெளியில் சுடர்கள் படச்சாரு
ஐந்தாம் நாளில் பறக்கும் நீந்தும் உயிர்கள் படச்சாரு
ஆறாம் நாளில் விதவிதமாய் விலங்குகள் படச்சாரு
அவரைப் போல மனிதரை உருவாக்கி மகிழ்ந்தாரு -2