thanaka vanthu nan ventum enru kaipitiththu azhaiththavare

இயேசுவே உம்மை நம்பி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தானாக வந்து நான் வேண்டும் என்று கைபிடித்து அழைத்தவரே
என் தாயின் கருவிலேநான் உருவாகும் முன்னே முன்குறித்து வைத்தவரே -2
என் வாஞ்சைகள் எனக்குள் உருவாகும் முன்னமே நிறைவெற்ற துடிப்பவரே
என் சத்துருக்கள் என்னில் ஓங்கிவரும் முன்னமே முன் வந்து நிற்பவரே.
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன் இயேசுவே உம்மை நம்பி மதில்லை தாண்டுவேன் இயேசுவே உம்மை நம்பி வெற்றியை பெறுவேன்
உம்மை நம்பியே -2
ஆமானின் தந்திரங்கள் மோர்தகாய்க்கு ஆசீர்வாதமாக மாறியதே -2
முன்னின்று நடத்துபவர் கர்த்தர்தாமே கொஞ்சமும் யோசிக்காமல் முன்னேறி செல் -2
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன் இயேசுவே உம்மை நம்பி மதில்லை தாண்டுவேன் இயேசுவே உம்மை நம்பி வெற்றியை பெறுவேன்
உம்மை நம்பியே -2
யோர்தான் பின்னிட்டு திரும்பியதே செங்கடல் இரண்டாக பிளந்ததே -2
இஸ்ரவேல் ஜெனங்களுக்கு இறங்கினவர் இன்றைக்கும் எங்கள் மேலே இறங்கிடுவார் -2
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன், இயேசுவே உம்மை நம்பி மதில்லை தாண்டுவேன், இயேசுவே உம்மை நம்பி வெற்றியை பெறுவேன்
உம்மை நம்பியே -2