Thanden Paliyinil Ennai Thanthean song lyrics

தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்
தந்தையே உன்னில் சரணடைந்தேன்
நிலையான வாழ்வில் நிலைத்து நின்றேன்
நிறைவாய் வாழ்ந்திடுவேன்
இதயம் என்னும் அப்பம் செய்தேன் – அதில்
அன்பு என்னும் ரசம் கலந்தேன்
உன் பலியில் நான் பலியாக
உள்ளத்தை உனக்களித்தேன்
தியாகம் என்னும் பீடம் கண்டேன் – அதில
சுயநலத்தை தகனம் செய்தேன்
பொதுப்பணியில் நான் பலியாக
என்னையே உனக்களித்தேன்